ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக 3,985 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபா நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பத்திற்கு விரிவான விபத்து- ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும் விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 4 லட்சம் ரூபா நிவாரணத் தொகையும், நிரந்தர ஊனத்திற்கு ஒரு லட்சம் ரூபா நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு .14.99 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்
மேலும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ஆயிரத்து 31.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.