கடந்த 4 ஆண்டுகளில் இலங்கையில் திறமையான வீரர்கள் உருவாக வில்லை என இலங்கையின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையுடன் தனக்கு தொடர்பு இல்லை எனவும் அது தனக்கு வருத்தத்தை அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டியில் மூன்றுமுறை இறுதிச் சுற்றுவரை சென்ற இலங்கை அணி தற்போது மோசமான நிலையில் இருப்பது வருத்தமளிக்கின்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்;
மேலும் தாங்கள் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் பணம் பெரிய வி;டயமாக இல்லை எனவும் விக்கெட், ஓட்டங்களை எடுப்பதில் கவனம் செலுத்தியதாகவும் தற்போது பணத்துக்கு மதிப்பு கொடுப்பதனால்தான கிரிக்கெட்டின் தரம் குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த 3, 4 ஆண்டுகளில் திறமை யான வீரர்களை உருவாக்க வில்லை எனவும் திறமையான வீரர்கள் கிடைத்தாலும், அவர்கள் எப்படி விளையாடவேண்டும் என அறிந் திருக்கவில்லை எனவும் தெரிவித்த முரளிதரன் தனக்கு இலங்கை அணிக்கு பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ இருக்க விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளர்h.
15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் 15 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த பெரிட் விளையாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது எனவும் இதற்கு பெரிட் கிரிக்கெட் பாஷ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்த கிரிக்கெட் தொடரை ஊக்கப்படுத் துவதே தனது பணி. எனவும் தெரிவித்துள்ளார்.