இந்திய பாராளுமன்ற நிலைக்குழு முன் முன்னிலையாக முடியாது என டுவிட்டர் வலைத்தளத்தின் தலைமை செயலதிகாரியும், சிரேஸ்ட அதிகாரிகளும் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமூக ஊடகங்களில் பொது மக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்ற இந்திய தகவல் தொடர்பு துறைக்கான பாராளுமன்ற குழு இதில் கலந்து கொள்வதற்கு டுவிட்டர் நிறுவனத்துக்கு கடந்த 1ம் திகதி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
ருவிட்டரின் தலைமை செயல் அதிகாரியும் சிரேஸ்ட அதிகாரிகளும் வந்து கலந்து கொள்வதற்கேற்ப இந்த கூட்டம் நாளை 11ம் திகதி வரை பிற்போடப்பட்டிருந்தது.
எனினும் பாராளுமன்ற நிலைக்குழு முன் முன்னலையாக முடியாது என டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியும், சிரேஸ்ட அதிகாரிகளும் குறைந்த கால அவகாசத்தில் வர முடியாது என மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
00