பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இன்று(15-02-2019) இடம்பெற்றுள்ளது இன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில்
கடந்த டிசம்பர் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின்னரான நிலைமைகள், இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம், வீதி அபிவிருத்தி, வீட்டுத்திட்டம், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. முன்னதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மாவட்டத்தின் அபிவிருத்தியும், தேவைகளும் குறித்து விளக்கமளித்தார்.
இதன் போது கடந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட விவசாய அழிவுக்கான நட்டஈடு பத்துபேருக்கான காசோலைகளும், யுத்தபாதிப்புக்கான நட்டஈடு நூறு பேருக்கும் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, அமைச்சர்களான வஜிர அபேயகுனவர்தன, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம். ஹரிசன், சாகல ரத்னாயக்க, விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், சித்தார்த்தன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.