287
ஈழத் தமிழரான தென்னிந்திய இசையமைப்பாளர் ஜேக்கப் விமல் என அழைக்கப்படும் பெஞ்சமின் ஜோர்ச் விமலராஜனின் இறுதி அஞ்சலியும் நல்லடக்கமும் இன்று( 24.02.2018 ) ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளது.
இவர் கடந்த 18 ஆம் திகதி அன்று இந்தியாவில் மரணமடைந்த நிலையில் அஞ்சலிக்காக மன்னார் கொண்டுவரப்பட்ட இவரது உடல் அங்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
“இப்படிக்கு என் காதல்” என்ற திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய இவர் “காதலே என்னைக் காதலி” உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
Spread the love