174
பன்னிப்பிட்டிய பகுதியில் கொள்ளையிடப்பட்ட பெரும் மதிப்புடைய வைரக்கல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாகந்துரே மதூஷினால் 500 கோடி ரூபாவிற்கும் மேல் பெறுமதியான இந்த வைரக்கல் கடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தக் கடத்தலுடன் தொடர்புடைய நபரே பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, கெசல்வத்த பகுதியில் உள்ள வீடோன்றில் இருந்து குறித்த கடத்தப்பட்ட வைரக்கல் மீட்கப்பட்டுள்ளது எனவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறையை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love