Home சினிமாஇந்தியில் அஜய் தேவ்கனுக்கு நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

இந்தியில் அஜய் தேவ்கனுக்கு நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

by admin


இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.

சாவித்திரியாக ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் நடித்த பின்னர் அவருக்கு வரவேற்பு மற்றும் சம்பளம் உயர்ந்தது. தற்போது இந்தி திரைப்பட உலகிலும் படங்களில் நடித்து வருகின்றார். பிரபல இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கை கதை படமாகிறது.

இதில் அஜய் தேவ்கன் ரகீமாக நடிக்கிறார். அவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். அமித் சர்மா இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது,

“இந்தி படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. நான் சவாலான வேடங்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். இந்தி படமும் அப்படித்தான் இருக்கும். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதியை இந்த படம் பேசும்” என்றார்.
போனிகபூர் சிபாரிசின் பேரிலேயே கீர்த்தி சுரேசுக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்தியில் கீர்த்தி சுரேஷின் திரைப்படங்களுக்கு என்ன வரவேற்பு கிடைக்கும் என்பது மிக முக்கியமான எதிர்பார்ப்பு ஆகும்.
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More