168
உயர் கல்வி அமைச்சின் கீழுள்ள மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினராக பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் இன்று (27) நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நியமனம் செய்யப்பட்டார்.
இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியரும் ஆவார். தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் நிலையில், கல்விச் சமூகத்தின் புலமைச் சொத்தாகிய பேராசிரியர் காதருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love