இன்று காலை பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவில் பதிவாகியுள்ளது
உள்ளு}ர் நேரப்படி இன்று காலை 7.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அங்குள்ள குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது
இந்த நிலநடுக்கமானது 127 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டிருப்பதுடன் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று பப்புவா நியூகினியா நாட்டு தேசியப் பேரிடர் தடுப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
#papuanewguinea #earthquack #Magnitude