தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை தான் கைது செய்யப்பட மாட்டேன் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவாதம் அளித்தால் இந்தியா வருவதற்குத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் ஜாகிர் நாயக் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்தியாவில் அவரது அமைப்புக்கும் மத போதனைகளுக்கும் தடை விதிப்பட்டதனையடுத்து மலேசியா சென்ற ஜாகிர் நாயக் அங்கு ; நிரந்தரக் குடியுரிமை பெற்று அங்கேயே தங்கியுள்ளார்.
இந்த நிலையில் ‘தி வீக்’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியிலேயே தான் இந்தியா வரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசாங்கத்தை எதிர்த்து எவராலும் பேச முடிகிற நிலைமை காணப்பட்டதுடன் நீதி பெறுகிற வாய்ப்பு 80 சதவிகிதமாக இருந்தது எனவும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நீதி பெறுகிற வாய்ப்பு 10 – 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்
தான் சொல்லித்தான் குண்டு வைத்ததாக பங்களாதேஷ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தார்களா எனக் கேள்விஎழுப்பிய அவர் அப்பாவி மக்களைக் கொல்வதற்கு தான் காரணமாக இருக்கவில்லை எனவும் தேசிய புலனாய்வுத் துறை வேண்டுமெனில் மலேசியாவில் தன்னிடம் விசாரணை செய்யலாம் எனவும் ஜாகிர் நாயக் கூறியுள்ளார்.
#India # ZakirNaik #Islamicpreacher