சினிமா

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகிய பக்ரீத் திரைப்படம்!


ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினரின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

திரைத்துறையில் வெற்றி பெருவதற்காக பல்வேறு முயற்சிகளில் விக்ராந்த் போராடி வருகின்றார். இந்த நிலையில் இத் திரைப்படம் மாறுபட்ட வகையில் அமையும் என்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றும் சொல்லப்படுகின்றது.

விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி வருகிறது‘பக்ரீத்’ திரைப்படம். ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு  நாயகியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் படம் மற்றும் சுவரொட்டியுடன் ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியன வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, இந்தத் திரைப்படத்தின் இசையை மே 17ஆம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.