52 பாகிஸ்தானியர்களை அமெரிக்காவில் இருந்து நாடுகடத்த அந்நாட்டு குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்ததனையடுத்து அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். விசாக்காலம் முடிவடைந்தபின்னர் தங்கள் நாடுகளுக்கு திரும்பாமல் சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
53 பேரை பாகிஸ்தான் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில், ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரை தவிர மற்ற 52 பேரும் பலத்த பாதுகாப்புடன் தனி விமானத்தில் பாகிஸ்தான் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த விமானம் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றதடைந்ததனையடுத்து குறித்த 52 பேரும் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
#Pakistaninationals #deported #US