உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளில் 95 வீதமானவர்கள் கொல்லப்பட்டு அல்லது கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தின் துறைசார் மற்றும் கண்காணிப்புத் தெரிவுக் குழுக்களின் உறுப்பினர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வதந்திகளை நம்பாமல் வெசாக் கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் சபாநாயகர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை முன்னிறுத்தி தொடர்ந்து மக்கள் தமது நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறும் சபாநாயகர் தமது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#உயிர்த்தஞாயிறு #தாக்குதல் #கைது #eastersunlk #karujeyasuriya