Home சினிமாமீண்டும் இணையும் ஆர்யா – சாயிஷா

மீண்டும் இணையும் ஆர்யா – சாயிஷா

by admin

 
திரையில் நாயகன் – நாயகியாக இணைந்த ஆர்யா – சாயிஷா அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி என்ற திரைப்படத்தில் இணைந்து நஎத்து வருகின்றனர்.

`கஜினிகாந்த்’, `காப்பான்’ படங்களில் இணைந்து நடித்த ஆர்யா மற்றும் சாயிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவீட்டாரது சம்மதத்துடன் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். நிஜத்தில் இணைந்த இவர்கள் தற்போது, மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர்.

`டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கவிருக்கும் `டெடி’ என்ற படத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது அவருக்கு நாயகியாக அவரது மனைவி சாயிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.அத்துடன் சதீஷ் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளையும், சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பையும் மேற்கொள்ளுகின்றனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

#மீண்டும்  #ஆர்யா #சாயிஷா #இமான்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More