183
குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்னும் வைத்தியரே இவ்வாறு செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் சம்பந்தமாக குருணாகல் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்தாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
#குருணாகல் #வைத்தியசாலை #வைத்தியர் #கைது #kurunagal #doctor #arrest
Spread the love