Home உலகம்கொங்கோவில் இடம்பெற்ற படகுவிபத்தில் 45 பேர் பலி

கொங்கோவில் இடம்பெற்ற படகுவிபத்தில் 45 பேர் பலி

by admin


கொங்கோ ஜனநாயகக் குடியரசின் மேற்குப் பகுதயில் உள்ள மை-என்டொம்பே என்னும் நதியில் படகொன்று மூழ்கியதில் குறைந்தது  45பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்ற நிலையில் தற்போது வரையில் தாங்கள் 11 சிறுவர்கள் உட்பட  45 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது படகில் எத்தனைப் பேர் இருந்தனர் என்பது குறித்து உடனடியாகத் தெரியவராதபோதும், சில நூற்றுக்கணக்கானோர் படகில் இருந்ததாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் எனவும் நதியிலிருந்து 170 பேர் மீட்கப்பட்டிருந்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொங்கோ ஜனநாயகக் குடியரசிலுள்ள நீர்நிலைகளால் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் வீதிகளால் இணைக்கப்படாமல் இருக்கின்ற நிலையில், அங்கு படகுகளில் பயணம் செய்வதே பொதுவான போக்குவரத்து முறையாகக் காணப்படுகின்ற நிலையில் படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது

#congo #boat accident #கொங்கோ

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More