கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் வடக்கு பகுதியில் வனவளத்திணைக்களம் ஆக்கிரமித்துள்ள விவசாயிகளின் வயல்காணிகளை அந்த மக்களுக்கே உரித்துடையது என்றும் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்;சின் பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டு காலப்;பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக மலையகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்;து வந்த மக்கள் பூநகரி ஜெயபுரம் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
1984 ஆண்டுகளில் இந்தப்பிரதேசத்தில் 548 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கான காணிகளும் அவர்கள் நெற் செய்கையினை மேற்கொள்ளக்கூடிய வகையில் தலா ஒரு ஏக்கர் வரையான வயல் காணிகளும் அப்போது வழங்கப்படிருந்தன.
அவற்றை துப்பரவு செய்து பயிர்ச்செய்கைகளை மேறகொண்டு வந்த நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளால் குறிதத பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்;து வெளிமாவட்டங்களிலும் இந்தியாவின் தமிழகத்திலும் தஞ்சமடைந்தனர்.
யுத்தசூழல் அற்று அமைதியான இக்காலப்பகுதியில் 2009ம் ஆண்டு இறுதியிலிருந்து மக்கள் மீள்குடியேறினர். இவ்வாறு மீள்குடியேறிய மக்கள் தமது வயல் காணிகளை துப்பரவு செய்து வாழ்வாதாரப்பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளமுனைந்த போது குறித்த வயல் நிலங்கள் கண்ணிவெடிகள் அபத்தான பகுதியாகக் காணப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டில் இந்தப்பிரதேசங்களில் காணப்பட்;டவெடிபொருட்கள் மனித நேயக்கண்ணடிவெடி அகற்றும் பிரிவினால்; அகற்றப்பட்டு ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரதேச செயலகத்;திடம் கையளிக்கப்பட்டது. 2017;ம் ஆண்டு யூலை மாதம் 18ம்திகதி பூநகரிப்பிரதேச செயலகத்தில நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் ஜெயபுரம் மக்களுக்குரிய வயல் காணிகளில் கண்ணிவெடிகளை அகற்றியபகுதிகளிலிருந்து 100 ஏக்கர் காணியை முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்;பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வயல் காணிகள துப்பரவு செய்து வழங்குவதற்கு விசேட நிதியொன்றை ஒதுக்ககித்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர சிவஞானம் சிறிதரன் ; விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 2017ம்;ஆண்டு நவம்பர் மாதம் 16ம்திகதி இந்தக்காணிகளை துப்பரவு செய்வதற்காக ஒரு மில்லியன் ரூபாவும் அதேபால டிசம்பர் மாதம் 12ம்திகதி ஒரு மில்லியன் ரூபாநிதியும் விடுவிக்கப்பட்டு துப்பரவுப்பணிள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் வனவளத்திணைக்களம் குறித்த காணிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகள் எனத்தெரிவித்து அதன் துப்பரவுப்பணிகளை தடுத்து நிறுத்தியது.
இதனையடுத்து, 2018ம்ஆண்;டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி குறித்த காணிகளை பிரதேச செயலக உத்தியோகத்தரகள் வனவள உத்தியோகத்தர்களின் களவிஜயத்தின் போது அங்கு வனவளத்திணைக்;களத்திற்குச்; சொந்தமான எந்தவித அடையாளங்களும் அங்கு காணப்;படவில்லை என்ற போதும் வனவளத்திணைக்களம் இந்தக்காணிகள் தமக்;குச்சொந்தமான காணிகள் என்று குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, இப்பகுதி கமக்கார அமைப்பினர் வடமாகாண ஆளுனர் யாழ் கிளிநொசசி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர் மனோகணேசன் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரச தலைவர் என்று எல்லோருக்குமே தங்களுடைய கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்.
ஆனால் எந்தவித தீர்வும் கிடைக்காத நிலையில் கடந்த ஜனவரி மாதம் இது தொடர்பில் இலங்ககை மனித உரிமைகள் ஆணைக்கழுவின் யாழ் மாவட்ட அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் இக்காணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தொடர்புகொண்டு வினவியபோது,
நேற்றைய தினம் பகல் 11.30 மணிக்கு நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்;ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குறித்த காணிகளை மேற்படி மக்களுக்கே வழங்க வேண்டும் என்றும் இக்கலந்துரையாடலில் முடீவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலின் முடிவில் தொடர்புடைய தரப்பினரிடையே இணக்கம் காணப்பட்டு குறித்த வயற்காணிகளை உடனடியாக அளவீடு செய்து ஒரு மாத காலத்திற்குள் அம்மக்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டது தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் பாராளமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்தின வனவளத்திணைக்களபொதுப் பாதுகாப்பு அதிகாரி மகிந்த செனவிரத்தின கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வடக்கு மாகான மேலதிக காணிஆணையாளர் மகேஸ்வரன் பூனகரி பிரதேச செயலாளர் எஸ். கிருஸ்னேந்திரன் ஜெயபுரம் வடக்கு கிராம அலுவலர் ஜெயபுரம் வடக்கு கமக்கார அமைப்பின் தலைவர் அ.இராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்னர் .
#வனவளத்திணைக்களம் #ஆக்கிரமித்துள்ள #விவசாயிகளின் #வயல்காணிகள் #மீள கையளிக்க,