வெறுப்பு பேச்சுக்களின் விளைவாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதோடு, இன வன்செயல்களும் தூண்டிவிடப்படுவதாக தம்மை சந்தித்து கலந்துரையாடிய ஐ.நா சபை பிரதிநிதிகளிடம் கவலை தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், சட்ட ஆட்ச்சிக்கு மதிப்பளிக்கப் பட வேண்டும் என்றும், சட்டமும் ஒழுங்கும் உரிய முறையில் பேணப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் நிலைமையை தாமதமின்றி கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் கூறினார்.
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை விவகாரத்தைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமையவாக அவர்கள் முகம் தெரியக்கூடியவாறான உடைகளை அணியத்தக்கதாக, பலவந்தமான கட்டாயப்படுத்தல்கள் கூடாது என்றும், சுயமாக தாமாகவே முன்வந்து அவற்றை கடைப்பிடிப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார்.
ஐ.நா பயங்கரவாத ஒழிப்புப் பணியகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளான லீலா எஸார்கி, அட்ரியா டீ லண்ட்றீ, இலங்கைக்கான ஐ.நா தூதுவர் ஹனா சிங்கர், இலங்கை ஐ.நா பிரதிநிதி கீதா சப்ஹர் வால் ஆகியோரும் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
#ரவூப் ஹக்கீம் #ஐ.நா #இன வன்செயல் #ஊடகங்கள்