பிரித்தானிய நிர்வாகத்திலிருந்து ஹொங்கொங்கை சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹொங்கொங்; அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று அதன் பாராளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்
ஹொங்கொங்;கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை தாய்வான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை அரசு கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
ஹொங்கொங் பாராளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் முன்புற கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான வாசகங்களை சுவர்களில் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹொங்கொங்; அரசாங்கத்திற்கு எதிராக கடந்த மார்ச் மாதத்திலிருந்து அமைதி வழியில் நடைபெற்று வரும் போராட்டத்தின் வடிவம், தற்போது முதல் முறையாக திசைமாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
1997ஆம் ஆண்டு இதே நாளில் ஹொங்கொங் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலிருந்து சீனாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது #ஹொங்கொங் #போராட்டக்காரர்கள் #பாராளுமன்றத்தின் #போராட்டம்