பலமான காற்று வீசக்கூடும் என்பதால் குமரி பகுதியிலுள்ள மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு திசையிலிருந்து 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்பதால், மாலைதீவு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் தேனி, திருநெல்வேலி, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி பகுதியிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை#குமரி #மீனவர்களை #கடலுக்கு #எச்சரிக்கை