ஜம்மு – காஷ்மீருக்கு அண்மையில் 10,000 கூடுதல் காவல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 25,000 படையினரை அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நேற்று வியாழக்கிழமை இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து போன்றவற்றில் மிகப்பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படலாம் என்ற அச்சம் அங்கு நிலவி வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை காவல் பணியில் இருந்தவர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு காவல் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமர்நாத் யாத்திரையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #ஜம்மு – காஷ்மீருக்கு #படையினர் #அமர்நாத் யாத்திரை