18-வது உலக கிண்ண கூடைப்பந்துத் தொடர் சீனாவில் கடந்த 16 நாட்களாக நடந்து வந்த நிலையில் ஸ்பெயின் அணி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது
32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஆர்ஜன்ரீனா அணிகள் நேற்றையதினம் போட்டியிட்ட நிலையில் ஸ்பெயின் 95-75 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு 2006-ம் ஆண்டில் அந்த அணி பட்டம் வென்று இருந்தது.
அதேவேளை பிரான்ஸ் அணி 67-59 என்ற புள்ளி கணக்கில் அவுஸ்திரேலியாவை வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.அத்துடன் 5 முறை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றிய அமெரிக்கா காலிறுறுதியுடன் வெளியேறியதுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது
.இந்த உலக கிண்ணப் போட்டியில் முதல் இடங்களை பிடித்த ஸ்பெயின், ஆர்ஜன்ரீனா உள்பட 8 அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
அடுத்த உலக கிண்ண கூடைப்பந்து போட்டியை 2023-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது #உலககிண்ண #கூடைப்பந்து #ஸ்பெயின் #சம்பியன்