493
மயூரப்பிரியன்
தியாக தீபம் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.நல்லூர் வீதியில் திலீபன் உண்ணாவிரதமிருந்த இடத்தில் திலீபன் உயிரிழந்த நேரமான காலை 10.48 அஞ்சலி செலுத்தப்பட்டது, அதனை தொடர்ந்து நல்லூர் பின் வீதியில் பருத்துத்துறை வீதியில் தற்போது இடித்தழிக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. #யாழில் #தியாகதீபம் #திலீபன் #நினைவேந்தல் #நல்லூர்
Spread the love