மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் உள்ள பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்ப பெண்கள் பொருளாதர ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு என அண்மையில் அரச சார்பற்ற நிறுவனமான ‘பிரிஜிங் லங்கா’ நிறுவனத்தால் அமைக்கப்பட்டு இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவரால் ஆரோக்கிய உணவகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் இளைஞர்களுக்கான வாய்புக்களை உருவாக்கும் முகமாகவும் இசையுடன் கூடிய புதிய உணவுகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு தற்போது இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நவீன உணவுகள் அழைக்கப்படவர்களுக்கு வழங்கப்படுவதுடன் உள்ளூர் ரீதியில் இசை துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை உள்ளடக்கி இசை நிகழ்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்சியாக வார இறுதி நாட்களில் புதிய உணவுகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தபடவுள்ளதுடன் இளம் கலைஞர்களுக்கான வாய்புக்கள் வழங்கப்படுவதுடன் குறித்த உணவகத்தின் மூலம் கிடைக்கு வருமானத்தில் ஒரு பகுதி இளைஞர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளது.
அனேகமான உணவகங்கள் மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற போதும் பெண் தலைமத்துவ குடும்பங்களின் இவ் முயற்சி அனைவராலும் பாரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.