Home இலங்கைமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் – காவல்துறை மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் – காவல்துறை மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு

by admin


காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமை , கொலைக்குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உட்பட முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, கொழும்பு பிரதான நீதிவன் நீதிமன்றினால் கடந்த 09 ஆம் திகதி மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #பூஜித்ஜயசுந்தர #ஹேமசிறிபெர்னாண்டோ #விளக்கமறியல்   #உயிர்த்தஞாயிறு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More