காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் பிணை மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமை , கொலைக்குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் மேல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, கொழும்பு பிரதான நீதிவன் நீதிமன்றினால் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு இருவரும் பிணை மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #பூஜித்ஜயசுந்தர #ஹேமசிறிபெர்னாண்டோ #பிணை #உயிர்த்தஞாயிறு