Home இலங்கைமட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

by admin


காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் நேற்று சனிக்கிழமை கவனயீர்ப்பு ஊர்வலம் மற்றும் போராட்டத்ததில்; ஈடுபட்டுள்ளனர்

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியினர் மட்டக்களப்பு திருமலை வீதியில் ஆரம்பித்து நகர் மணிக் கூட்டு கோபுரம் வரை சென்று அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்;. உண்மை, நீதி, இழப்பீடு , 6 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு மீள இடம்பெறாமை போன்ற சுலோகங்கள் மற்றும் காணாமல் போன உறவுகளின் புகைப்படத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பகல் 12 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.   #மட்டக்களப்பு  #காணாமல்ஆக்கப்பட்டோர் #கவனயீர்ப்புபோராட்டம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More