163
யாழ்ப்பாணத்தில் இன்று (14.11.19) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி, நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. குருநகர், கனகசிங்கம் வீதியை சேர்ந்த 42 வயதுடைய எம்.லக்கி என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தார்.
தனியார் பாதுகாப்பு சேவையின் மேற்பார்வையாளரான இவர், நிறுவன காவல் கடமைகளை மேற்பார்வை செய்ய இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோதே விபத்து நேர்ந்தது.
Spread the love