வவுனியா ஓமந்தை காவல்துறைதுறைப் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியிலிருந்து பழுதடைந்த நிலையில் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்றையதினம் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியில் துப்பரவுப்பணியில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள் மண்ணில் புதையுண்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நிலையில் அது தொடர்பாக ஓமந்தை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நீதி மன்ற உத்தரவினை பெற்று இன்று அவற்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இருந்து மூன்று மகசின்கள், மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியனவே காவல்துறையினரால் மீட்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஓமந்தை #பழுதடைந்த #வெடிபொருட்கள் #மீட்பு