சீனா – வூஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 33 மாணவர்களில் 14 பேர் மருத்து பரிசோதனைகளை பூர்த்தி செய்துகொண்டதன் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தியதலாவை இராணு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே அவர்களது உறவினர்கள் பொறுப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கல்வி கற்ற 33 மாணவர்களும் தியத்தலாவை சென்றடைந்தனர்…
சீனாவின் வுஹானில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 33 மாணவர்களும் தியத்தலாவை இராணுவ முகாமை சென்றடைந்துள்ளனர். இன்று (01.02.20) காலை ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் குறித்த மாணவர்கள் சீனாவின் வுஹான் நகரில் இருந்து மத்தல விமான நிலையத்தை அடைந்தனர்.
பின்னர், மத்தல விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் சிறப்பு பேருந்து மூலம் தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள 32 அறைகளுடன் கூடிய வைத்திய முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு இவர்கள் இரண்டு வாரக்காலம் தடுத்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் குறித்த மருத்துவ முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.