அவுஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் (வயது 42) என்பவNரு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நியூசிலாந்து ரக்பி வாரீயர்ஸ் அணியில் வீரராக இருந்த இவர் ரக்பி உலக கோப்பை விளையாட்டுகளில் விளையாடி உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரக்பி விளையாட்டுகளில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற ரோவான் அவுஸ்திரேலியாவை சேர்ந்த உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளரான ஹன்னா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்திருந்தார்
திருமணத்துக்கு பின்னர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் குடியேறிய ரோவான் தனது மனைவியுடன் இணைந்து உடற்பயிற்சிக்கூடம் ஒன்றை தொடங்கினார்.
இவ்hகளுக்கு 3 குழந்தைகள் பிறந்திருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதன் பின்னர் ரோவான் தனியாக வசிக்க தொடங்கிய நிலையில், அவரது 3 குழந்தைகளும் தாய் ஹன்னாவுடன் வாழ்ந்து வந்தன.
இந்த நிலையில் ஹன்னா, தனது 3 குழந்தைகளுடன் காரில் சென்று கொணடிருந்த போது அவரது காரை வழிமறித்த முன்னாள் கணவர் ரோவான், அவருடன் பேச வேண்டுமென காரில் ஏறி ஹன்னாவுடன் வாக்குவாதத்தில் ஈடு்பட்டார்.
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதையடுத்து ரோவானை காரில் இருந்து இறங்குமாறு ஹன்னா தெரிவவித்ததனையடுத்து அதனை ஏற்க மறுத்த ரோவான் தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை ஹன்னா மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார்.
அதன் பின்னர் ரோவான் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டார் அந்த வழியாக நடந்து சென்ற ஒருவர் இதை பார்த்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்த போதும் அவரால் ஹன்னாவை மட்டுமே காப்பற்ற முடிந்தது. ரோவானும், 3 குழந்தைகளும் காருக்குள்ளேயே உடல் கருகி பலியாகினர். மயிரிழையில் உயிர்தப்பிய ஹன்னாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அதே போல் அவரை காப்பாற்றிய வாலிபருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். #அவுஸ்திரேலியா #விளையாட்டுவீரர் #தற்கொலை #ரக்பி