மன்னார் மாவட்டத்தில் விவசாய செய்கையை மேற்கொண்ட விவசயிகள் தற்போது நெல் அறுவடையை ஆரம்பித்துள்ளனர்.எனினும் அறுவடை செய்கின்ற நெல்லை காய வைப்பதற்கு நெல் காயவைக்கும் தளம் போதிய அளவு இல்லாத நிலை காணப்படுவதாகவும்,இதனால் தாங்கள் பல்வேறு அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதீக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மழை வெள்ள பாதிப்பினால் செலவுகள் அதிகரித்து காணப்படுகிறது. பல கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தளங்களில் காயப்போடுவதற்கான ஏற்றி இறக்கும் செலவுகள் அதிகமாக காணப்படுகின்றது. அதன் காரணமாக விவசாயிகள் நெல் காயப்போடுவதற்கு வீதிகளை பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பெருநிலப்பரப்பு பாரிய விவசாய பூமியாக காணப்பட்ட போதும் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை .
விவசாய நடவடிக்கையில் மிக முக்கிய தேவையாக உள்ள நெல் காயப்பபோடும் தளங்கள் போதிய அளவு இல்லை.அமைக்கப் பட்டிருக்கும் சில தளங்களும் பல கிலோ மீட்டருக்கு அப்பபல் பொருத்தமில்லாத இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது
அவை அளவுகளில் சிறியதாகவும் காணப்படுகிறது.தற்போது அறுவடைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. அதனால் தற்பொது காணப்படுகின்ற ஒரு சில தளங்கள் போதுமானதாக இல்லை.
அத்துடன் நெல் மூடைகளை ஏற்றி இறக்குவதற்கும் இலகுவாக இருப்பதால் இந்த வீதிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு பொருத்தமான இடங்களில் அதிகளவான நெல் மூடைகளை காயப்போடுவதற்கு எற்ற வகையில் தளங்கள் அமைத்துக் தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #தளம் #வீதிகளில் #நெல் #அவலம் #விவசயிகள்