(க.கிஷாந்தன்)
தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் வனப்பகுதியில் வேகமாக பரவிய தீ விமானப்படையின் உதவியுடன் (12.03.2020) அன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்தனர். தீயணைப்பு நடவடிக்கைக்காக விமானப்படையின் பெல் 412 ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது.
12.03.2020 அன்று மதியமே தீபரவல் ஏற்பட்டதாகவும் இதனால் சுமார் 20 ஏக்கர் தீக்கிரையானதாகவும் பாதுகாப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இரத்மலானை விமானப்படை முகாமிலிருந்து பெல் 412 ரக ஹெலிகொப்டர் வரவழைக்கப்பட்டது. மேல் கொத்மலை நீர்த்தேகத்தில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் நீரை எடுத்து வந்து தீயை அணைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், இராணுவம், காவல்துறையினர் , விசேட அதிரடிப்படையினர், வனத்துறை அதிகாரிகள் ஆகியோரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினர். கடந்த 9 ஆம் திகதியும் இந்த வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும் இதனால் 50 ஏக்கர் எரிந்து நாசமானதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். #ஹெலிகொப்டர் #தீக்கிரை #கட்டுப்பாட்டுக்குள் #தலவாக்கலை #வனப்பகுதி