உயிராபத்துகள் ஏற்பட்டால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்..
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொள்ளாது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் உயிராபத்துகள் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தற்பேதைய அரசாங்கம் உள்ளிட்ட சகல அரசில் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான செயற்முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து இதுவரை எவரும் ஆழ்ந்து சிந்திக்கவில்லை என கூறிய அவர், அரசியல்வாதிகளை விடவும் நாட்டு மக்கள் அதன் பாரதூரதன்மையை அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் இது குறித்து உறுதியான தீர்மானம் ஒன்று எட்டப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஏதேனும் உயிராபத்துகள் ஏற்படுமாயின் அதற்கான அனைத்து பொறுப்புகளையும் அரசியவாதிகள் ஏற்க வேண்டும் எனவும் கூறினார்.
அனைவருக்கும் தேர்தல் ஒன்றின் தேவை உள்ளதாக தெரிவித்த அவர் உயிராபத்துகள் ஏற்பட்டால் பொது மக்கள் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் எனவும் கூறினார்.