Home உலகம்பிரித்தானியாவில் ஒரேநாளில், 260 பேரை காவுகொண்டது கொரோனா – மொத்தம் 1019 பலி..

பிரித்தானியாவில் ஒரேநாளில், 260 பேரை காவுகொண்டது கொரோனா – மொத்தம் 1019 பலி..

by admin

பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு  ஒரே நாளில்   மேலும் 260 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தத் திடீர்  அதிகரிப்புடன் பிரித்தானியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,019ஐ எட்டியுள்ளது. இந்த இறப்புகளில்  பெரும்பாலானவை இங்கிலாந்தில் ஏற்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் 33 முதல் 100 வயதுக்கு உட்பட்டவர்கள் என  இங்கிலாந்தின் NHS தெரிவித்துள்ளது. அவர்களில் 13 பேரைத் தவிர  ஏனையவர்களுக்கு பல்வேறு  மருத்துவப் பிரச்சனைகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இவற்றில்  16 பேரின் இறப்புகள் லூசியம் மற்றும் கிரீன்விச் பகுதிகளின் NHS அறக்கட்டளையிலும்,  15 பேரின் மரணங்கள்  எப்சம் மற்றும் செயின்ட் ஹெலியர் பல்கலைக்கழக மருத்துவமனைகளின் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் இருந்து மேலும் ஏழு இறப்புக்கள் ஏற்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. வேல்ஸில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு அதிகரித்து எண்ணிக்கை 38 ஐ எட்டியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் மேலும் இரண்டு பேர் இறந்துள்ளனர், அங்கு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. #பிரித்தானியா #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More