இலங்கை கட்டுரைகள் மலையகம்

மலையக மக்களும் அவர்களது நாளாந்த வாழ்வும் – ரவிச்சந்திரன் சாந்தினி..

இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியமர்த்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களும் அப்பிரதேசங்கள் சார்ந்து தொழில் நிலைகளில் உள்ளோரும் நாளாந்த வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நாளாந்த வாழ்வை கடத்திச் செல்ல நம்பி இருப்பது அவர்களது “கூலித் தொழிலையே” ஆகும்.

காலை கதிரவனின் விடியல் மாலை மக்களின் விடியலே எனும் கூறிக்கொண்டு பொழுது ஒவ்வொருவரும் நவீனயுகத்தில் இயந்திரங்களைப் போல இயங்குகின்றனர். மின்சாரத்தைக் கொண்டு விசிறி சுழல்வது போல ஒவ்வோரு தனிமனிதனும் வாழ்க்கை வட்டத்தினுள் சுழல்கின்றனர் எனலாம். அன்றாட கூலித்தொழில் குடும்ப சுமைகளை போக்கிச்; செல்லும் என்ற மன நம்பிக்கையுடன் மலையகத்தவர்களும் தொழிலுக்குச் செல்கின்றனர்.

இவர்களினுடைய நம்பிக்கையின் அடையாளச் சின்னமாக இருப்பது தேயிலை எனும் பச்சை தெய்வமாகும் மழை, வெயில், காற்று, அட்டை, புழு, பூச்சிகள், பாம்புகள் என பல்வேறு இயற்கை செயற்பாடுகள் மற்றும் விலங்கினங்கள், மண்சரிவு, மரம் முறிந்து விழுதல், தேனிக்கள் என இயற்கை கோரல்களிடம் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, அது மட்டுமன்று குறைவான கொழுந்து கூடையில் இருந்தால், அரை நாள் பேர் வேலைக்குத் தாமதமாகச் சென்றால் கங்காணியிடம் கடும் சொற்களுடன் பேச்சு, மழை வந்து விட்டால் மகராசி பாட்டு எடுப்பது போலவும் காலான் முளைப்பது போலவும் மழை துளியின் வருகை அட்டை எட்டிப் பார்க்கும் நேரமாகும். இவ்வாறு அது தேடி நிற்பது வேலை செய்யும் ஒவ்வோரு கூலித்தொழிலாளிகளின் உடம்பில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்வதாகும்.

இவ்வாறு உடம்பில் ஏறும் அட்டையினைப் பிடுங்கி எறிவதா? கூடையில் கொழுந்தினை நிரப்புவதா? என ஒவ்வொரு நொடி பொழுதும் மலையக மக்கள் தங்களது வாழ்க்கையினை உள்ளக்குமுறல்களுடன் கழிக்கின்றனர். அந்த வகையில் வாழ்க்கை சுமை அவர்களை பல்வேறு கோணங்களுக்கு இட்டுச் செல்கின்றது. இவ்வாறு பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கத்தினர். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் சக்தியாக காணப்பட்டாலும் இவர்களது வாழ்க்கையினைப் பொருளாதார அடிப்படைத் தேவையிலிருந்தே இனம் காண வேண்டியதாகின்றது.

அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடியிருப்பு நிரந்தரமானவையாகவோ உரிமையுடையனவாகவோ காணப்படுவதில்லை. மலையக மக்களினுடைய வாழ்விடங்கள் நெருக்கமான இடப் பற்றாக்குறை கொண்ட இருண்ட வாழ்வினையே குறிக்கின்றது. நாளாந்த அடிப்படை சம்பளமாக கூலி மட்டத்திலும் பார்க்க குறைவான கூலியினையே பெற்றுக் கொள்கின்றனர். இவ் வருமானம் அடிப்படைத் தேவைகளுகக்கு போதுமானதாகவில்லை அதுமட்டுமன்றி வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யும் கணக்குப்பிள்ளை, தச்சு வேலை செய்வோர் போன்றோரும் இம்மட்டத்தினரே. இதைவிடக் கடைகளில் சிப்பந்திகளாகவும் வீடுகளில் வேலைக்காறர்களாகவும் தொழில் புரியும் நபர்கள் இப்பிரதேசத்து மக்களாகவே காணப்படுகின்றனர்.

மொத்தத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரம் போதியளவு உணவு நிரந்தர வசிப்பிடமின்மை சீரான போக்குவரத்து இன்மை, உரிய பாடசாலைகள் இன்மை, உரிய சம்பளம் இன்மை என்பன மலையக மக்களின் வாழ்க்கை நிலையிலும் பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும், சாதி அமைப்பிலும் மிகவும் அடிமட்டங்களைக் கொண்டிருப்பதால் இவர்களின் பொருளாதார வாழ்க்கை இன்னமும் அடிமட்ட நிலையை குறிப்பதோடு உயிர் வாழ்வதற்குரிய போராட்டம் நிறைந்ததாக உள்ளது எனலாம். மேலும் இதற்குப் பிரஜாவுரிமை அற்றவர்கள் என்றும் பிரதேச மக்களுடன் இன்னும் ஒரு மட்டத்திலானவர்கள் என்ற நிலைப்பாடும், சர்வதேச ரீதியில் முதலாளித்துவ ஏகாதிபத்தியமும் அதனுடைய காலனித்துவக் கொள்கையும் இவர்களின் சமூக உணர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தி நிற்கின்றன. உண்மையில் கூறப்போனால் குடும்ப வறுமை காரணமாக சிறுவர்களுக்கான கல்வி வசதி கிடைப்பதில்லை. சிறுவயதிலேயே தொழிலுக்குச் செல்கின்றனர். ஒவ்வோரு தலைமுறையினரையும் உழைக்கும் நிலைக்கு தள்ளி விடுகின்றது.

இவ்வாறு மலையக மக்களின் வாழ்வை முன்னெடுத்துச் செல்வதில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மாறுமா மலையக வாழ்சு??????

பிஞ்சு குழந்தைகளை பிள்ளைகள்
பாதுகாக்கும் மட்டத்தில் நிறுத்தி,
உச்சி மலை முகடுகளில் கொழுந்தை
பறிக்கும் மலையகத் தாயே!!!

அட்டைக்கு இரத்தம் கொடுக்க பறித்து
ஓட்டமும் நடையுமாய்…..
பிள்ளைகள் உறங்கும் காப்பகம் வந்தே
ஊட்டுவார் பாலை!!!!

தலையெழுத்து கொழுந்து பறிக்க வேணும்,
தவறாது மலைக்குச் செல்ல செணும்
குலை நடுங்க குளிரில் வாட வேணும்
இருள் விலக எழுந்து செல்ல வேணும்
மலையக வாழ்வு மாற இறைத் தெய்வம்
அருள் புரிய வேணும்……!!!

ரவிச்சந்திரன் சாந்தினி
நுண்கலைத்துறை,
கிழ.பல்கலைக்களகம்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link