கொரோனா வைரஸ் காரணமாக விரைவில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலை ஏற்படுமென உலக வங்கி கணித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் 25 சதவீதமான மக்கள் எட்டு நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய நாடுகளில் வசிக்கின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவிகிதம் இருக்குமென கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனாவுக்கு பின்னர் 1.8 – 2.8 வீதம் என்ற அளவில்தான் இருக்குமென உலக வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 1.5 – 2.8 வீதம் என்ற அளவில்தான் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும் நிதியாண்டில் இருக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் நேபாளம், பங்களாதேஸ்;, பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் இருக்கும் எனவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைதீவுகளில் பொருளாதார மந்தநிலை இருக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது #தெற்காசிய #மந்தநிலை #கொரோனா #இந்தியா #இலங்கை