178
த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலா 600,000 ரூபா இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது எனவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #தபினான்ஸ் #வைப்பாளர்கள் #இழப்பீடு #வருமானவரி #தண்டம்
Spread the love