முஹுது மஹா விஹாரைக்கான காணி அளவீட்டு பணியை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறித்த விகாரை சுற்றுச்சூழலில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் அண்மையில் விஹாரை காணி தொடர்பில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டது.
இதனால் மக்கள் தமக்கான நியாயம் கோரி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பு தரப்பினரிடமும் முரண்பட்டனர். இந்நிலையில் திங்கட்கிழமை(22) பொத்துவில் முஹுது மஹா விஹாரைக்கான காணி அளவீட்டுப் பணிகளை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொத்துவில் பிரதேசத்தின் முஹுது மஹா விஹாரைக்கான காணி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தால் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் எம்.எச்.முஹம்மட் றாபி இவ்வுத்தரவை பிறப்பித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொடர்ந்தும் குறித்த விகாரை வளாய சூழலில் கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். #முஹுது #விஹாரை #காணிஅளவீடு #இடைநிறுத்துமாறு #நீதிமன்றம் #முஸ்லீம்