கருணாவிடம் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பினனர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 23 ஆம் திகதி அம்பாறையில் அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்
கருணா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை – கருணாவை கைது செய்யுமாறு மனு தாக்கல்
Jun 25, 2020 at 07:08
கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றையதினம் முன்னிலையாகியுள்ளார். அம்பாறை பகுதியில் வைத்து கடந்த 23 ஆம் திகதி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் ஆனையிறவில் 24 மணித்தியால நேரத்தில் மூவராயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் தெரிவித்திருந்தார். குறித்த கருத்து தொடர்பில் பதில் காவல்துறைமா அதிபரின் அறிவுரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கருணாவை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் காவல்துறைமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும்குறிப்பிடத்தக்கது #வாக்குமூலம் #கருணா #குற்றப்புலனாய்வுதிணைக்களம் #கைது #விடுதலைப்புலிகள்