இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்ந்து செல்கின்றது.
இந்நிலையில் இன்று காலை இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்களின் படி இ கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 906 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதனையடுத்து அங்கு கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்னிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 410 பேர் உயிரிழந்துள்ள தனையடுத்து தனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது.
எனினும் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 832 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 9 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது #இந்தியா #கொரோனா #பாதிப்பு #ஊரடங்கு