Home இந்தியாபிகாரில் ஒரே நாளில் இடி, மின்னலுக்கு 20 பேர் பலி

பிகாரில் ஒரே நாளில் இடி, மின்னலுக்கு 20 பேர் பலி

by admin


பிகாரில் கனமழை பெய்து கடந்த வாரம் இடி, மின்னல் தாக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நேற்று ஒரே நாளில் இடி, மின்னலுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.

பிகார், ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

இந்த நிலையில், பிகாரில் நேற்று ஒரே நாளில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிகார் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு மேலும் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. #பிகார் #இடி #மின்னல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More