தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை பருத்தித்துறை நீதவான் கடுமையாக எச்சரித்து விடுவித்தார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டவரை இன்று மதியம் நீதாவனின் முன்னிலையில் முற்படுத்தியிருந்தனர். அதனை அடுத்து நீதவான் சிவாஜிலிங்கத்தை வழக்கு தவணைகளுக்கு ஒழுங்காக சமூகமளிக்க வேண்டும் என கடுமையாக எச்சரித்து விடுவித்தார்.
அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் தினம் இன்றைய தினமாகியதால் ஏதேனும் நினைவேந்தல் நிகழ்வினை சிவாஜிலிங்கம் ஏற்பாடு செய்யலாம் எனும் சந்தேகத்திலையே அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகங்கள் பலர் மத்தியில் தோன்றியிருந்தன.
வடமராட்சி உள்ளிட்ட யாழின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது