162
தேர்தல் பரப்புரையில் ஈட்டுபட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கனகசுந்தரம் ஜெயக்குமார் என்பவரே உயிரிழந்தவராவர்.
ஊர்காவற்துறை பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குமாறு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை வீடுகளுக்கு சென்று பரப்பு ரையில் ஈடுபட்டுள்ளார். அதன் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மயக்கமடைந்து வீழ்ந்த போது , அங்கிருந்தவர்கள் அவரை ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட முன்னரே அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என தெரிவிக்கப்பட்டது. #பரப்புரை #பிரதேசசபைஉறுப்பினர் #உயிரிழப்பு #தமிழ்தேசியகூட்டமைப்பு
Spread the love