Home இலங்கை வாக்களிப்பு நடவடிக்கைகள்   நிறைவு

வாக்களிப்பு நடவடிக்கைகள்   நிறைவு

by admin

இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான  வாக்களிப்பு நடவடிக்கைகள்   நிறைவடைந்துள்ளன. 12,985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்ப்பில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன்  1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை  காலை 7  அல்லது 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும்   வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 19 பேர், கம்பஹா மாவட்டத்தில் 18, களுத்துறை மாவட்டத்தில் 10, கண்டி மாவட்டத்தில் 12, மாத்தளை மாவட்டத்தில் 05, நுவரெலியா மாவட்டத்தில் 08, காலி மாவட்டத்தில் 09, மாத்தறை மாவட்டத்தில் 07, ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07, யாழ். மாவட்டத்தில் 07, வன்னி மாவட்டத்தில் 06, மட்டக்களப்பு மாவட்டத்தில் 05, திகாமடுல்ல மாவட்டத்தில் 07, திருகோணமலை மாவட்டத்தில் 04, குருநாகல் மாவட்டத்தில் 15, புத்தளம் மாவட்டத்தில் 08, அனுராதபுரம் மாவட்டத்தில் 09, பொலன்னறுவை மாவட்டத்தில் 05, பதுளை மாவட்டத்தில் 09, மொனராகலை மாவட்டத்தில் 06, இரத்தினபுரியில் 11, கேகாலை மாவட்டத்தில் 09 என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அதேவேளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு  வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #வாக்களிப்பு  #நிறைவு  #தேர்தல்ஆணைக்குழு #அரசியல்கட்சிகள் #சுயேட்சை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More