தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்.
சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் எனக் குறிப்பிட்டுள்ள அவா் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவா் தொிவித்துள்ளாா். #பல்கலைக்கழகங்கள் #கல்விஅமைச்சர் #ஜீஎல்பீரிஸ் #ஆசியஅபிவிருத்திவங்கி