20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்று தாக்கல் செய்ய்யப்பட்டுள்ளதுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்த வரைபில் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறும் குறித்த திருத்தத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு அவசியம் என அறிவிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த சட்டமூலம் பொதுஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் நேற்றையதினம் சட்டத்தரணி இந்திக கால்லகேவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #20 வதுதிருத்தசட்டமூலம் #மனுதாக்கல் #ஐக்கியமக்கள்சக்தி