இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 340 மில்லியன் ரூபாவை வழங்க நியு டயமன்ட் கப்பலின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தத் தொகையை வழங்க நியு டயமன்ட் கப்பலின் உரிமையாளர் இணக்கம் தொிவித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
மத்திய கிழக்கில் இருந்து இந்தியாவுக்கு 270,000 தொன் எண்ணெயை கொண்டு சென்ற நியு டயமண்ட் கப்பல், செப்டம்பர் 3ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் சங்கமன் கந்தவிலிருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில் தீப்பிடித்திருந்தது.
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இந்திய கடலோர பாதுகாப்புப் மற்றும் கடற்படையுடன் இணைந்து செப்டம்பர் 11ஆம் திகதி கப்பலின் தீயை அணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது #நியுடயமன்ட் #கப்பல் #உரிமையாளர் #இணக்கம்