வல்வெட்டித்துறையில் இடம்பெறும் வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலிகளின் சின்னம் இருந்தமையால் இராணுவத்தினரும் காவல்துறையினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை ஊரணி மைதானத்தில் இந்த உதைபந்தாட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகி இடம்பெறுகிறது.
உறுமும் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கோ அல்லது காட்சிப்படுத்துவதற்கோ அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினா் அறிவுறுத்தியுள்ளனர். #வல்வைஉதைபந்தாட்டபிரிமியர்லீக் #சின்னம் #உறுமும் #புலிகள் #இராணுவம் #எதிர்ப்பு