உலக உணவு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, திங்கட்கிழமை சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ஆரம்பமாகியிருந்தது. முதலில் அறிவிக்கப்பட்ட மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகளான ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுவதாக நோபல் பரிசு அக்கடமி அறிவித்திருந்தது.
அத்துடன் இயற்பியலுக்கான நோபல் பரிசு கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள். இலக்கியத்திற்கான நோபல் பரிசை, அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், இன்று அறிவிக்கப்பட்ட மிகவும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு அமைப்புக்குஅறிவிக்கப்பட்டுள்ளது. 58 ஆண்டுகளாக வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அளித்ததற்காக அவ்வாறு உலக உணவு அமைப்பு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. #உலகஉணவுஅமைப்பு #அமைதிக்கான #நோபல்பரிசு #wfp